இவ்வருடத்தின் கடந்த இரு மாதங்களில் இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்த அமெரிக்க டொலர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 2024 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொள்வனவு செய்யப்பட்ட மொத்த தொகை

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1199 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Scroll to Top