இலங்கையில் பல விசேட கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க (Shantha Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மானிய வட்டி விகிதத்தில் கடன்

இந்த கடன் திட்டங்கள் தொழிலதிபர்களுக்கானது.

இதன்படி, உள்ளூர் மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வர்த்தக வங்கிகள் ஊடாக மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.